Tamilnadu
லாரி சக்கரத்தில் சிக்கி தாய் பலி.. 5 வயது சிறுவன் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரது மனைவி அனுசூர்யா. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் தன்வீர் என்ற மகன் உள்ளார்.
இவர் மணப்பாறை, விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தனது மகனை பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து , அனுசூர்யா அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே லாரியின் சக்கரத்தில் சிக்கி அனுசூர்யா உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த போலிஸார் அங்கு வந்து அனுசூர்யா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சக்திவேல் என்பதைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது தாய்க்கு என்ன நடந்து என்று தெரியாமல் சிறிய காயத்துடன் 5 வயது சிறுவன் அழுது கொண்டிருந்தது காண்போர் கண்களை கலங்கவைத்துள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!