Tamilnadu

சென்னை IIT மீண்டும் முதலிடம்.. தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று சாதனை!

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள் ஆகியவை உள்ளடக்கிய தரவரிசை பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஒட்டுமொத்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள 100 கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி முதல் இடத்தை பெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் இந்த தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை அம்ரிதா விஷ்வா வித்யபீதம் 16வது இடத்திலும், வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (வி.ஐ.டி.) 18வது இடத்திலும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 21வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 22வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 24வது இடத்திலும் இருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 4வது முறையாக ஒட்டு மொத்த தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு !