Tamilnadu
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு !
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110விதியின் கீழ் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி தற்போது அதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் முதலில் 15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில், பரிசுத்தமான முறையில் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
அதன் பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட உத்தரவு
இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், கேஸ் சிலிண்டர்கள், எரிவாயு ஸ்டவ் போன்றவை வழங்கப்பவுள்ளது.
சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக் குழுவிற்கு முறையாக பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள்.
காலை 5:30 மணிக்கு தொடங்கி 7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்க வேண்டும்.
சமைத்த உணவை காலை 8:15 முதல் 8:45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்
Also Read
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !