Tamilnadu

“L.முருகன் கல்வியாளரா? - ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்.. பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு”: அமைச்சர் அதிரடி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி," மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழாவை அறிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. மேலும் இணை வேந்தரான தன்னை கேட்காமலேயே பட்டமளிப்பு விழாவில் யாரைப் பேச அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்த செயல்பாடுகள் பா.ஜ.க-வின் பிரச்சாரமாக உள்ளது. பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனை கவுரவ விருந்தினராக அழைப்பதன் நோக்கம் என்ன?. அரசியலைப் புகுத்துவதற்காகவே பட்டமளிப்பு விழாவை ஆளுநர் நடத்துகிறார்.

வரலாற்றைக் கொஞ்சமாவது படித்திருந்தால் ஆளுநருக்கு இது எல்லாம் தெரிந்திருக்கும். ஆளுநர் இந்திய நாட்டின் வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் எந்த ‘-ism’ பின்பற்றுவோராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்” ன தெரிவித்துள்ளார்.

Also Read: "வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் திமுக மீது சீறுகிறார்".. பழனிசாமி மீது ஆர்.எஸ்.பாரதி தாக்கு!