Tamilnadu
விமானம் மூலம் சென்னை வந்த வாக்குப்பெட்டி.. தலைமை செயலகத்தில் தயாராகும் குடியரசுத் தலைவர் தேர்தல் பணி!
இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல் பா.ஜ.க கூட்டணி சார்பாகத் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். பின்னர், இருவரும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து திரௌபதி முர்மு,யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் மாநிலம் முழுவதும் சென்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் அனைத்து மாநில சட்டமன்றத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்த வாக்குப்பெட்டிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
நேபாள வெள்ளம்.. சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?