Tamilnadu
"வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் திமுக மீது சீறுகிறார்".. பழனிசாமி மீது ஆர்.எஸ்.பாரதி தாக்கு!
வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் தி.மு.க மீது சீறுகிறார் எடப்பாடி பழனிசாமி என அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "அ.தி.மு.க-வின் வன்முறையை மக்களுக்கு எடுத்துக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
முதலமைச்சர் ஸ்டாலினை பற்றியும், தி.மு.க-வை பற்றியும் குறை கூற வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். தி.மு.க-வும். அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?. எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அ.தி.மு.கவில் எப்பொழுதும் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
தி.மு.க-வை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சியையும் அழிக்க நினைத்தது கிடையாது. தி.மு.க-வை அழித்து விடுவேன் என ஜெயக்குமார் கூறுவது தவறு. வன்முறை நடக்கும் போது சீல் வைப்பது அரசின் கடமை. உங்களுக்கு வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள். நீதிமன்றம் அ.தி.மு.க அலுவலகத்தை திறக்கச் சொன்னால், நீதிமன்ற உத்தரவை மதிப்போம்.
வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் தி.மு.க மீது சீறுகிறார் பழனிசாமி. ஓ.பி.எஸ் எங்களுக்கு ஏன் ஆதரவாக செயல்பட வேண்டும். கொடநாடு வழக்கு விரைந்து விசாரிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் வழக்கு இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!