Tamilnadu
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் - சிவன் ஸ்ரீநிவாசன், போஸ் வெங்கட் வெற்றி!
சென்னை விருகம்பாக்கத்தில் இன்று சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் வசந்தம் அணி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிவன் ஸ்ரீநிவாசன் 351 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் போஸ் வெங்கட் 349 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சுப்ரமணியம் ஜெயந்த் 290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்..மற்ற பதவிகளான துணைத்தலைவர், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளது.
வெற்றிக்குப்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் சிவன் ஸ்ரீநிவாசன் மற்றும் பொதுச்செயலாளர் போஸ் வெங்கட், தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் ஏற்கனவே நாங்கள் செயல்படுத்தி வந்த திட்டங்கள்மீண்டும் தொடரும், செயற்குழு கூட்டத்தை கூட்டி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்..
50%க்கும் மேல் வாக்களிக்க வராததற்கு அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளார்கள் அதனால் வரவில்லை என்றும் எங்களுடைய 3 ஆண்டுகால பதவி நிறைவுற்று மீண்டும் தேர்தல் வரும் போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 2500ஐ கடந்திருக்கும் என்றும் கூறினார். மேலும், அனைவரும் வாக்களிக்கும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும் எனவும் கூறினர்.
Also Read
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?