Tamilnadu

ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் திமிங்கல கழிவுகளை கடத்திய கும்பல்.. 6 பேரை மடக்கி பிடித்த தமிழ்நாடு போலிஸ் !

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை பாலம் அருகில் அம்பர்கிரிஸ் (திமிங்கல உமிழ்நீர்) கடத்தி விற்பனை செய்ய இருப்பதாக தஞ்சாவூர் குற்ற நுண்ணறிவு பிரிவு போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து குற்ற நுண்ணறிவு போலிஸார் மற்றும் கோடியக்கரை வனத்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 இருசக்கர வாகனத்தில் அம்பர்கீரிஸை கடத்தி வந்தவர்களை சோதனை செய்தபோது மறைத்து கடத்தி வந்த 3 கிலோ 750 கிராம் எடைக் கொண்ட ரூபாய் 1 கோடி மதிப்புடைய அம்பர் கிரிஸ் கைப்பற்றினர்.

அம்பர் கிரிசை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறைசேர்ந்த ஆண்டவர், சிவலிங்கம், மணிவாசகன், நாகையைச் சேர்ந்த இளையராஜா, ஓம்பிரகாஷ், திருத்துறைப்பூண்டி சேர்ந்த சரவணன் ஆகிய 6 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் 4 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் 1 கோடி மதிப்புள்ள அம்பர்கீரிஸ் வேதாரண்யம் பகுதியில் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோடிக்கணக்கில் விலைபோகும் ‘அம்பர்கிரிஸ்’ : திமிங்கலத்தின் எச்சங்களுக்கு இவ்வளவு மவுசா? - என்ன காரணம்?