Tamilnadu
வீட்டில் விளையாடிய 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 50 வயது முதியவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை !
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அடுத்த கீழ பொன்பேத்தி, சேவகன் பேட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (50) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். கடந்த 22.12.2020 அன்று அதே பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை கட்டாயமாக பலவந்தபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பான புகாரை நெடுங்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காரைக்கால் போகோ சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அல்லி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி குற்றவாளியான பெயிண்டர் ஜெயராமனுக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் சிறுமியையும் சிறுமியின் பெற்றோரையும் கொலை மிரட்டல் விடுவதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மொத்தம் 22 ஆண்டுகள் விதித்தது.
ஆயிரம் ரூபாய் அபதாரத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது தீர்ப்பு வழங்கியது காரைக்கால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!