Tamilnadu
Instagram-ல் பழக்கம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 பவுன் நகையை அடகுவைத்து பணத்தை பங்குபோட்ட நண்பர்கள்!
மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு இனஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதனால் இவருக்கு பயாஸ்கான் அகமது என்பவர் நண்பராகியுள்ளார். இதையடுத்து இருவரும் காதலித்துள்ளனர்.
இந்த காதலைப் பயன்படுத்தி, திருமணம் செய்து கொள்வதாகச் சிறுமிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார் பயாஸ்கான். இதனால் சிறுமி அவரை முழுமையாக நம்பியுள்ளார். இதையடுத்து அடிக்கடி சிறுமிக்கு பயாஸ்கான் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பின்னர் சிறுமியிடம் படிப்பு செலவிற்குப் பணம் வேண்டும் என கூறி அவரிடம் இருந்து 10 பவுன் நகை பயாஸ்கான் வாங்கியுள்ளார். இதையடுத்து அந்த 10 பவுன் நகையை பயாஸ்கான் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணகுமார், இவரது தாய் முத்துலெட்சி ஆகிய நான்குபேரும் நகை கடையில் அடகுவைத்துள்ளனர்.
இதன் மூலம் கிடைத்த ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை நான்குபேரும் பங்குபோட்டுள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய்க்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தனது மகளை பாலியல் தொல்லை கொடுத்து, நகை வாங்கி மோசடி செய்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பயாஸ்கான் மற்றும் அவரது நண்பர்கள் ஆகிய நான்கு பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் அடகுக் கடையில் வைத்த நகையையும் போலிஸார் மீட்டுள்ளனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?