Tamilnadu
கெட்டுபோன மீன நீங்க சாப்பிடுவீங்களா?: வாக்குவாதம் செய்த உரிமையாளர்கள்: 300 கிலோ பறிமுதல் செய்த அதிகாரி!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அணையில் மகிழ்ச்சியாகக் குளித்து விட்டுச் சுடச்சுட அங்கு விற்கப்படும் மீன்களைச் சுற்றுலாப் பயணிகள் ஒருபிடி பிடிப்பர்.
இந்நிலையில் மேட்டூர் அணை அருகே உள்ள மீன் விற்பனை கடைகள் மீது தொடர் புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது கெட்டுப்போன மீன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வர்ணம் பூசப்பட்ட மீன்கள் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 300 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
மேலும் மீன் கடை உரிமையாளர்களிடம் இப்படி கெட்டுப்போன மீன்களை நீங்கள் சாப்பிடுவீங்களா? , இதை விற்பனை செய்யலாமா? என சரமாரியாகக் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். இதையடுத்து கெட்டுப்போன மீன்களை விற்ற கடைக்கு எச்சரிக்கை நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை அருகே 300 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!