Tamilnadu
சுற்றுலா சென்ற இடத்தில் IT ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்.. 50 அடி பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்த விபத்து!
சென்னை சோலிங்கநள்ளூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியற்றும் ஊழியர்கள் 18 பேர் டெம்போ டிராவலர் வாகனத்தில் உதகையை சுற்றி பார்க்க சென்னையிலிருந்து டெம்போ டிராவலர் வாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்துள்ளனர்.
நேற்று மாலையில் உதகையை சுற்றி பார்த்த பின் இரவு 9.30 மணி அளவில் கல்லட்டி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்குவதற்காக கல்லட்டி மலை பாதை வழியாக சென்றுள்ளனர். அவர்களது வாகனம் 15-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
அதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 14 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் மற்றும் ஓட்டுனர் உள்பட19 பேர் இருந்த நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த முத்துமாரி (24) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 18 பேரும் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து குறித்து புதுமந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனியார் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் வினோத் என்பவரையும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
ரூ.265.50 கோடி : 9371 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
டித்வா புயலால் பாதித்த இலங்கை : 950 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதக்கலவரத்தை தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
-
“ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்.. இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு: நெகிழ்ச்சி சம்பவம்!