Tamilnadu
புதையலில் பழங்காலத்து நகைகள்.. ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில தொழிலாளர்கள் !
"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபர்களும் இருப்பார்கள்" என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு (45). இவர் அங்கு ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளரிடம் தங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது தாங்கள் மத்திய பிரதேசத்திலிருந்து வருவதாகவும், தற்போது கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஒருநாள் வேலைக்காக குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்ததாகவும், அதனை குறைந்த விலையில் விற்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் அதிலிருந்த ஒரு தங்க கட்டியை சாம்பிளுக்கு அவரிடம் காட்டியுள்ளனர். மேலும் கோவை காந்திபுரம் வந்தால் பல லட்சம் மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை வெறும் ரூ.5 லட்சத்திற்கு தருவதாகவும் கூறியுள்ளனர்.
அவர்கள் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பியுள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் 20-ம் தேதி பணத்துடன் பாலு காரில் கோவை சென்றுள்ளார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அதில் ஒருவர் தாங்கள் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தமிழ்நாடு ஓட்டல் முன்பு தங்க கட்டிகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அங்கு சென்ற பாலு அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து தங்க கட்டி என நினைத்து போலி தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றுள்ளார். பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலு இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீன காலகட்டத்தில் பல விழிப்புணர்களை ஏற்படுத்தினாலும் தங்கத்தின் மீது உள்ள ஆசையால் பல நபர்கள் இப்படி ஏமாற்ற படுகிறார்கள் என்பதற்கு இந்த செய்தி எடுத்துக்காட்டாக உள்ளது .
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?