Tamilnadu
ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி.. வந்ததோ கரப்பான் பூச்சி பிரியாணி: வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சி !
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருகே 5 STAR என்ற அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த 5 STAR உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் ஏராளம். முழு அசைவ உணவகமான இதில், சிக்கன், மட்டன், மீன் என்று பலவகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் மூர்த்தி என்பவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அதில் கரப்பாண்பூச்சி தென்பட்டதால் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த கடையின் ஊழியரிடம் மூர்த்தி மற்றும் அவரது மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதான முயற்சி செய்த போதும் அது பயனற்று போனது.
பசியுடன் ஆசையாய் மட்டன் பிரியாணி சாப்பிட வந்த தம்பதியினர், பிரியாணியில் ஆடுக்கு பதிலாக கரப்பான் பூச்சியை பார்த்ததால், அரைகுறை பசியுடன் சண்டையிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!