Tamilnadu
வெளிநாட்டிற்குக் கடந்த முயன்ற 2 சாமி சிலைகள்.. 2 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்: சிக்கியது எப்படி?
சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் கி. ஜெயந்த் முரளிக்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த சிலர் இரண்டு புராதனமான சரஸ்வதி, லெட்சுமி சிலைகளை வைத்து இருப்பதாகவும், அவைகளை விற்க முயற்சி செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலிஸார் விசாரணை செய்ததில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார், ஆகியோரிடம், ஒரு அடி உயரமும் 1/2 அடி அகலமும் சுமார் 4 கிலோ எடையும் கொண்ட ஒரு சரஸ்வதி உலோக சிலையும், சுமார் 4 அடி உயரமும் சுமார் 2 கிலோ எடையும் கொண்ட ஒரு லெட்சுமி உலோக சிலையும் வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலைகளை வாங்கிக் கொள்வதாகவும், விலை குறித்து சிலைகளைப் பார்வையிட்டுப் பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய இவரும் கடந்த 29ம் தேதி கும்பகோணம் சுவாமி மலை அருகே சிலைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். அங்கு அங்கிருந்த சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரையும் பிடித்து 2 சிலைகளையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இருவரையும் கைது செய்து எந்த கோவிலிலிருந்து இந்த சிலைகள் எடுத்து வரப்பட்டது, யாருக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !