Tamilnadu
‘யாருக்காவது தைரியம் இருந்தால்..’ : சவால் விட்ட ஆப்பிரிக்கன்.. தட்டி தூக்கிய தமிழர் - நெகிழ்ச்சி சம்பவம்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் ஆண்டுதோறும் 'ஜம்போ சர்க்கஸ்' நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜம்போ சர்க்கஸ் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்களும் பங்கேற்று தங்கள் தனி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பார்வையாளர்களை வெகுவாக கவரும் இந்த சர்க்கஸ், அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்காக அமைகிறது.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர் ஒருவர் கலந்து கொண்டார். அதில் அவர், அதிக கனம் கொண்ட சுமார் 80 கிலோ வடிவிலான பெரிய இரும்பு உருண்டையை தனது ஒற்றைக் கையால் தூக்கி சாதனை செய்தார்.
சாதனை செய்த அந்த ஆப்பிரிக்க நபர், அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அந்த இரும்பு உருண்டையை ஒரு கையில் பிடித்து கொண்டு, மறு கையில் மைக்கை பிடித்து "யாருக்காவது தைரியம் இருந்தால், இந்த 80 கிலோ இரும்பு உருண்டையைத் தூக்கி காட்டுங்கள்" என்று வெளிப்படையாக சவால் விட்டார். இதனைக்கேட்ட ஒரு கும்பல் கைதட்டி சிரிக்க, அங்கிருந்த மக்கள் கொந்தளித்தனர்.
வழக்கமாக ஒரு திரைப்படத்தில் இது போல் சம்பவம் நடக்கும்போது, ஹீரோ என்ட்ரி கொடுப்பது போல், அந்த நிகழ்ச்சியிலும் நாகர்கோவில் மண்ணின் மைந்தனான கண்ணன் என்பவர் மேடைக்கு சென்று தான் இந்த சவாலை ஏற்க தயார் என்று கர்ஜித்தார்.
அதேபோல், அவரும் தனது ஒற்றை கையால் அந்த 80 கிலோ இரும்பு உருண்டையை தலைக்கு மேல் தூக்கி சாதனை செய்தார். மேலும் சவால் விட்ட ஆப்பிரிக்க கலைஞர் கண்ணனை கட்டி தழுவி பாராட்டினார்.
அந்த இரு கலைஞர்களின் செயல் அங்கிருந்த பார்வையாளர்களை உற்சாகமடைய செய்தது. அதுமட்டுமின்றி, சர்க்கஸ் நிகழ்ச்சி முடியும் இறுதி நாளில் மீண்டும் இதே சாதனையை செய்யப் போவதாக அவர் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!