Tamilnadu
”பன்னீர்” ரோஜா மாலை போட்ட நிர்வாகி : டெலக்ஸ் பாண்டியன் நகைச்சுவையை நினைவுபடுத்திய எடப்பாடியின் செயல்
பெரும் பரபரப்புக்கு இடையே இன்று கூடிய அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமாக எதிரொலித்தது. இதன் ஆரம்பத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என இரண்டு தரப்பு ஆதரவாளர்களாலும் முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இதன் பின்னர் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்டது. தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் முறைப்படி அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதம் வாசிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 11-தேதிக்கு பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
இந்த நிகழ்வு முழுவதும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஓ.பி.எஸ் இந்த கூட்டத்தில் இருந்தே பாதியில் வெளியேறினார். ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் இது சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என அறிவித்து ஓ.பி.எஸோடு வெளியேறினார்.
இந்த நிகழ்வில் ஓ.பி.எஸ் தான் புறக்கணிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார். ஆனால் நேற்று வரை இனி அதிமுகவின் தலைவர் தானே என நினைத்து இருந்த இ.பி.எஸ்ஸும் நீதிமன்ற தீர்ப்பால் கடும் அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் மேடையில் இருந்து வெளியேறியதும் கடுப்பில் இருந்த இ.பி.எஸ்க்கு மாலை அணிவிக்க இ.பி.எஸ் ஆதரவாளர் முயன்றுள்ளார். அப்போது ஏற்கனவே கடும் கடுப்பில் இருந்த இ.பி.எஸ், "வேண்டாங்க... அட இருங்க... என்னங்க நீங்க வேற சும்மா" என அவரை பார்த்து ஆக்ரோஷமானார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!