Tamilnadu
பெண்ணிடம் செயின் பறிப்பு.. துணிச்சலுடன் கொள்ளையனை பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: நேரில் அழைத்து பாராட்டிய SP!
திருச்சி மாவட்டம், மணப்பாறை, தெற்கு லெட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கோமளாதேவி. இவர் கடந்த 17 ம் தேதி மாலை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் தனது 4 வயது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென கோமளாதேவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த செல்லையா என்ற ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் கொள்ளையர்கள் ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர்.
பின்னர், ஒரு கொள்ளையன் தப்பியோடிய நிலையில் மற்றொருவரை ஆட்டோ ஓட்டுனர் செல்லையா துணிச்சலுடன் பிடித்தார். பிறகு பொதுமக்களுடன் சேர்ந்து செல்லையா கொள்ளையனை போலிஸாரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து கொள்ளையனை பிடிக்கக் காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் செல்லையாவிற்கு போலிஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஆட்டோ ஓட்டுநர் செல்லையா மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்துப் பாராட்டி பரிசுகளை வழங்கியுள்ளார்.
Also Read
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!