Tamilnadu
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தை கடத்தல்.. 3 பேரை கைது செய்த போலிஸ்!
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி இசக்கியம்மாள். இந்த தம்பதிக்குப் பிரியங்கா என்ற 7 மாத குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு வீட்டில் தனது குழந்தையுடன் இசக்கியம்மாள் தூங்கியுள்ளார். பிறகு அடுத்தநாள் காலையில் எழுந்துபார்த்தபோது அருகே தூக்கிக் கொண்டிருந்த குழந்தை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அருகே இருப்பவர்கள் யாராவது குழந்தை தூக்கிக் சென்றுள்ளார்களா என அவர்களிடமும் கேட்டபோது யாரும் குழந்தையை பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர் குழந்தையைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் வீடு இருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலிஸார் அந்த மூன்று பேரையும் கண்டறிந்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதேபகுதியைச் சேர்ந்த கனி, முத்துசெல்வி, கார்த்திகேயன் என்பது தெரியவந்தது.
இவர்கள் குழந்தையை விற்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் கைதான கார்த்திகேயன் ரிப்போர்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூன்று பேரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!