Tamilnadu

ஆன்லைனில் வகுப்பு எடுக்கும்போதே உயிரை விட்ட களரி மாஸ்டர் - காரணம் என்ன?

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் என்பவர் ஆலப்பாக்கம், மதுரவாயல் பகுதியில் களரி பயிற்சி மையம் வைத்து நடத்தி வந்தார். இவரின் பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் களரி பயின்று வந்தனர்.

தனியார் யூடியூப் சேனல் இவர் குறித்த செய்தியை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்காக நேற்று மாணவர்களுக்கு களரி வகுப்புகள் நடத்தினார். அப்போது திடீரென வாந்தி எடுத்த அவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த கிரிதரன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அளவுக்கு அதிகமான பயிற்சியே கிரிதரனின் இறப்புக்கு காரணமாக இருக்கும் என அவரது உதவியாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக கிரிதரன் தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்து வந்துள்ளார். இதனால் ரத்த ஓட்டம் வேகமாகி மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read: “துண்டிக்கப்பட்ட சிசுவின் தலை.. தாயின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கொடூரம்” - பின்னணி என்ன?