Tamilnadu
கால்வாயில் குளித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்: நண்பர்கள் கண் எதிரே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகப் பூண்டி நீர் தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்புக் கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ஹரிஷ். இளைஞரான இவர் தனது நண்பர்கள் மற்றும் சகோதரனுடன் இணைப்புக் கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார்.
அங்கு அனைவரும் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஹரிஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப்பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே அங்கு வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் அடித்துச் செல்லப்பட்ட ஹரிஷ் உடலைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணா இணைப்புக் கால்வாயில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!