Tamilnadu
அக்னிபாத் முடித்தால் மருத்துவத்தில் சேரலாமா? பைத்தியக்கார கூட்டம்: அண்ணாமலையை சாடிய தி.மு.க MP!
நாடுமுழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் வட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் "நமது ஆயுதப்படையே மேலும் வலுப்படுத்தவே அக்னிபாத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது ஆயுதப்படையின் தன்மையை இளமையாக்க உதவும். தேசபக்தி மற்றும் துணிச்சலான இளைஞர்களை அக்னிபாத் திட்டம் உருவாக்கும்." என்று கூறியுள்ளார்.
அண்ணாமலையின் கருத்துக்கு பல்வேறு இணையவாசிகள் காட்டமாக விமர்சித்து வந்தநிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில், "அக்னிபாத் அருமையான திட்டம் என்று உளறும் 10 ஆம் வகுப்பு முடித்தவனுக்கு +2 பாஸ் என்று கொடுத்தால் எவ்வளவு மார்க் போடுவீங்க. அவர்கள் மருத்துவர், பொறியியல் போன்ற படிப்புகளில் இதை வைத்து சேரலாமா. பைத்தியக்கார கூட்டம்.." என்று காட்டமாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த கருத்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Also Read
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !