Tamilnadu
”நீ எடப்பாடி ஆளான்னு கேட்டு வாயில குத்திட்டாங்க” : ரத்தம் வழிய பேசிய அ.தி.மு.க நிர்வாகி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 5 நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செலவம் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலேயே ஜெயக்குமார் மீது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்றும் அ.தி.முக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் எடப்பாடி ஆதரவாளரா என கூறி ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகியை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து காயம் அடைந்த அ.தி.மு.க நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நீ என்ன ஜெயக்குமார் கூட வர, நீ என்ன எடப்பாடி ஆளா என கூறி வாயிலேயே குத்திட்டாங்க” என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலேயே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளமோதல் பொதுமக்கள் மத்தியில் முகசுளிப்பு ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!