Tamilnadu
நடுரோட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு.. ரவுடிகள் சதித் திட்டம் தீட்டச் செல்லும் போது நடந்த பயங்கரம்!
சென்னை, மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் இருந்த பை சாலையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த, சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு, காலில் படுகாயத்துடன் இருந்த நவரிடம் விசாரணை செய்தபோது வினோத்குமார் என்பதும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குள் இருப்பதும் தெரியவந்தது.
அதேபோல், இவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பேப்பர் பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்ததில் பயங்கரம் சத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்குக் காயம் ஏற்பட்டதும தெரியவந்து.
இதையடுத்து தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க போலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த கும்பல் ஏதாவது சதி திட்டம் தீட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டு எடுத்துச் சென்றார்களான என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!