Tamilnadu
தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூங்கிய இளைஞருக்கு நடந்த கொடூரம்.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விக்கி. இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு டிஷ் அண்டனா பொருத்தும் தொழில் நடத்தி வந்தார்.
இந்நிலையில், விக்கி நேற்று வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி படுத்துத் தூங்கியுள்ளார். இதையடுத்து, நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் தண்ணீர் தொட்டியின் மேலிருந்து கீழே உருண்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து காலையில் எழுந்து பெற்றோர் மகன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விக்கி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூக்கிய வாலிபர் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தமிழ்நாட்டில் கூடுதல் ரயில் சேவைகள் : தயாநிதி மாறன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில்!
-
“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!
-
ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு.. முதல்வர், அமைச்சர்கள் மீது SIT-யில் டி.ஆர்.பாலு எம்.பி புகார்!
-
‘சொல்லிக்கொள்ள சாதனை இல்லை.. வடிப்பதோ கிளிசரின் கண்ணீர்’ : முதலமைச்சர் விஜய் மீது முரசொலி தாக்கு!