Tamilnadu
தம்பி.. வணக்கம் தமிழ்நாடு: 44வது செஸ் ஒலிம்பியாட் லோகோ - சின்னத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோக மற்றும் சின்னத்தைச் சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான 50 நாட்கள் கவுன்டவுனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதேபோல்,#ChessChennai2022 என்ற ஹாஷ் டாகை முதலமைச்சர் வெளியிட அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் பெற்றுக்கொண்டார்.குதிரை வடிவிலான வெளியிடப்பட்ட சின்னத்துக்குத் தம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தியா சார்வில் இந்த போட்டியில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ், சசிகிரண், அதிபன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!