Tamilnadu
பேச மறுத்த காதலி.. மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த காதலன்!
சென்னை, வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த பத்து வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார். பிறகு காலையில் ஸ்டுடியோவை திறந்துபார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைப் பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிறகு இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் விக்னேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து நடத்திய விசாரணையில் விக்னேஷ் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் திடீரென அவரிடம் பேசா மறுத்துள்ளார் இதனால் விக்னேஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில்தான் வேலைபார்க்கும் ஸ்டுடியோவில் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!