Tamilnadu

பொறுக்கி கொண்டு வந்த ஆதாரங்களை நொறுக்கி தள்ளிய அமைச்சர்கள் : DMK IT Wing சம்பவம் !

தமிழ்நாடு அரசின் மகப்பேறு மகளிருக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். இவரின் இந்த பொய் குற்றச்சாட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே பதிலளித்து விட்டார்.

மேலும் டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது,நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு நடைபெற்று உள்ளது என நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், நாசர் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "ஆவின் சார்பில் இதுவரை கர்ப்பிணி பெண்களுக்கான பெட்டகத்தில் நெய் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆவினில் ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும் திட்டத்தில் உள்ளோம். மக்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும்.

ஊட்டச்சத்து பெட்டகம் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சிலர் வெளியிட்டுள்ளனர். மகப்பேறு மகளிருக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் Pro-PL Health Mix 2018ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்தவும், விளம்பரத்திற்காகவும் அண்ணாலை தயாராக இல்லாத பொருளை பற்றி பேசி வருகிறார்.

இனிவரும் காலங்களில்தான் ஆவினில் Pro-PL Health Mix தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆவினில் இல்லாத ஒரு பொருளுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது" என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க அண்ணாமலை பொறுக்கி கொண்டு வந்த ஆதாரங்களை நொறுக்கி தள்ளிய அமைச்சர்கள் என DMK IT Wing விமர்சித்துள்ளது. இது குறித்து DMK IT Wing சமூகவலைதளத்தில், "கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வாங்குவதில் அரசுக்கு இழப்பு என்றார் அண்ணாமலை; அவர் பொறுக்கி எடுத்து வந்த ஆதாரங்களில் 'ஒன்றுமில்லை' என்பதை சம்பந்தப்பட்ட துறையினரே விளக்கி, அவர் பொறுக்கிக் கொணர்ந்த ஆதாரங்கள், அத்தனையையும் நொறுக்கித் தள்ளினர்" என தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக பா.ஜ.க தலைவைர் அண்ணாலை தி.மு.க அரசின் முறைகேடுகளை பொறுக்கி எடுத்து வந்ததாக கூறிய நிலையில்தான், பொறுக்கி கொண்டு வந்த ஆதாரங்களை நொறுக்கி தள்ளிய அமைச்சர்கள் DMK IT Wing சம்பவம் செய்துள்ளது.

Also Read: ”மதுரை ஆதினம் தொடர்ந்து இதேபோல் பேசினால்”... அமைச்சர் சேகர்பாபு பதிலடி!