Tamilnadu
கதவைத் தட்டி இளம் பெண் மீது ஆசிட் வீசிய பெண்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
சென்னை அடுத்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் லேகா. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் ஐஸ்வரியா என்பவர் வந்து கதவைத் தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த லேகா மீது ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து ஐஸ்வரியா தப்பிச் சென்றுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் லேகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிட் வீச்சுக்குள்ளான லேகா, பார்த்திபன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். பிறகு இவர்கள் காதல் முறித்துள்ளது. இதையடுத்து ஐஸ்வரியா என்பவரைப் பார்த்திபன் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் லேகாவின் காதல் குறித்து ஐஸ்வரியாவிற்கு தெரியவந்துள்ளது. மேலும், லேகா மீண்டும் பார்த்திபனை காதலித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தீனதயாளன் என்ற நண்பரை அழைத்துக் கொண்டு லேகா வீட்டிற்குச் சென்று அவர் மீது ஆசிட் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா, தீனதயாளன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளம் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!