Tamilnadu
சாலையில் சென்றபோது திடீரென வெடித்து தீ பிடித்த சொகுசு கார்.. பொதுமக்களை பதறவைத்த சம்பவம்!
சென்னை, அண்ணா நகர் மேற்கு ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர் கணேசன். தொழிலதிபரான இவர் திருமங்கலத்திலிருந்து உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக இனோவா சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சொகுசு கார் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் காரில் தீ பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த சாலையிலிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இது குறித்து உடனே தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.பின்னர் காரில் சிக்கியிருந்த கணேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்து தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!