Tamilnadu
9.02 கிலோ தங்கம்.. அப்படியே விட்டுவிட்டு தப்பியோட்டிய கடத்தல் கும்பல்.. அதிரடி காட்டும் சுங்கத்துறை !
துபாயில் இருந்து பெரிய அளவில் விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் துபாயில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், துபாயிலிருந்து வந்திருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை தீவிரமாக சோதித்தனா். அதில் வந்த பயணிகள் அனைவரையும் சோதனை நடத்தி முடித்தனர். ஆனால் யாரிடமும் எந்த தங்கமும் சிக்கவில்லை. இதையடுத்து, சுங்க அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, துபாயிலிருந்து வந்திருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் ஏறி பரிசோதித்தனர்.
விமானத்தின் கழிவறைகளுக்குள் உள்ள தண்ணீர் தொட்டிகள், மற்றும் விமானத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பாா்சல்களை கண்டுபிடித்தனர். அனைத்து பாா்சல்களையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பாா்சல்களை பிரித்து பார்த்தனர். அவைகளில் தங்கப்பசைகள், கட்டிகள் இருந்தன.
அதேபோல் சென்னை விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கழிவறைகள் மற்றும் குப்பை தொட்டிகளில் சோதனை நடத்தினர். அங்கும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாா்சல்களை பறிமுதல் செய்தனா். அவைகளிலும் தங்கப்பசைகள், கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல் விமானத்திலும் விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிகளிலும் மொத்தம் 60 பார்சல்களை கைப்பற்றினர். இந்த 60 பார்சல்களில் 9.02 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள், பசைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 4.5 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு விமானத்தில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் விமான நிலைய வருகை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் காட்சிகள் ஆகியவைகளிலும் ஆய்வு செய்கின்றனா். ஒரே நாளில் ஒரே விமானத்தில் 4.5 கோடி மதிப்புடைய 9.02 தங்க கிலோ தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசிமிகள் ஒருவர் கூட சுங்கத் துறையிடம் சிக்காமல் தப்பி ஓடியது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!