Tamilnadu
பிறந்தநாள் மதுவிருந்தில் நண்பருக்குள் நடந்த சண்டை.. ட்ரீட் வைத்த நண்பர் அடித்துக் கொலை - பகீர் தகவல்!
சென்னை மாதவரம் தொகுதி சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (21). இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்தார். பிறந்தநாளான நேற்று மாரிமுத்து தனது நண்பர்களுக்கு மதுவிருந்து வைத்தார்.
அலமாதி ஏரியில் மாரிமுத்து தனது நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி, பின்னர் மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராமமூர்த்தி, மாரிமுத்துவை கன்னத்தில் அரைந்துள்ளார். இதில் மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரும் மாரிமுத்துவை சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலிஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலிஸார் நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய நபரை பிறந்தாளிலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!