Tamilnadu
புதிய கல்விக் கொள்கை.."நன்கு படித்த பிறகே முடிவு எடுத்துள்ளோம்": ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதில்!
பா.ஜ.க அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்தே எதிர்த்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தெளிவாகக் கூறிவருகிறது. மேலும் மாநிலத்திற்கு என்று தனியாகக் கல்விக்கொள்கையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். நேற்று நடைபெற்ற திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கூட, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.
அப்போது பேசிய ஆளுநர், "புதிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையைப் பலரும் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆளுநரின் இந்த பேச்சுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "புதிய கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்த பின்னரே தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று கூறிய நிலையில், மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புகிறோம். புதிய கல்விக்கொள்கையில் 3 ,5, 8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு கொண்டுவந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!