Tamilnadu
டெல்லியில் வேட்டி கட்டுவது இரண்டே பேர் தான்.. சிலை திறப்பு விழா பேச்சில் யாரை குறிப்பிட்டார் துரைமுருகன்?
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார். அப்போது அமைச்சர் துரைமுருகன்," அண்ணா சாலையில் காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு அடுத்து தற்போது முத்தமிழரிஞர் கலைஞரின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை திறந்து வரலாற்றில் இடம் பிடித்து இருக்கிறார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. அண்ணா சாலையில் இச்சிலை இருக்கும் வரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா பெயர் இருக்கும். அதிலும் வேட்டியில் ஆந்திராகாரர் போல இல்லாமல் நம்ம ஊர்காரர் போல இருக்கிறார். குடியரசு துணை தலைவர் நம்ம ஊர்காரர், டெல்லி சென்றாலும் வேட்டிக் கட்டிக்கொள்கிறார். டெல்லியில் வேட்டிக் கட்டுபவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வெங்கையா மற்றொருவர் சிதம்பரம்.
தலைவர் சிலையை பார்த்து நெஞ்சம் உருகி விட்டது. நம்மிடம் நேரில் பேசுவது போல் உள்ளது. சாதாரணமாக இருந்த அந்த இடத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சட்டமன்ற வளாகமாக மாற்றினார்.
அங்கிருக்கும் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் பார்த்து கட்டினார். காலையும், மாலையும் தினமும் அங்கு சென்று கட்டுமானத்தைப் பார்வையிடுகிறார். தலைவர் கலைஞரின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் அவருக்கு அண்ணாசாலையில் சிலை அமைத்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என தெரிவித்துள்ளார்
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !