Tamilnadu
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. எவ்வளவு? : ஒன்றிய அரசின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.120க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100க்கு மேல் விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அதேநேரம் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மறைமுகமாகப் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முதலமைச்சர்கள் தொடர்ச்சியாக ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல்மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதனால் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கலால் வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைகிறது. உலகளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், வளர்ந்த நாடுகளிலும் விலையேற்றத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாகக் குறைத்திருக்கிறது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!