Tamilnadu

மயிலாப்பூர் தம்பதி கொலை: மாஸ் ஸ்கெட்ச் போட்டு கொலை, கொள்ளை அரங்கேற்றம்.. பகீர் கிளப்பும் வாக்குமூலம்!

சென்னை மயிலாப்பூர் ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் நேற்று முன்தினம் காலை அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு அவரது வீட்டிலேயே அவரது கார் ஓட்டுநரால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் போலிஸார் கொலை செய்த கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ராய் ஆகிய இருவரையும் ஆந்திராவில் கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றவாளிகள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த ஆறு மாதமாக அமெரிக்காவில் இருந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர், கடந்த 3 மாதத்துக்கு முன்பாக ஸ்ரீகாந்த் மட்டும் சென்னை வந்து விட்டு உடனடியாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்ரீகாந்த், மனைவி மற்றும் மகன்களிடம் சமீபத்தில் விற்கப்பட்ட சொத்துகள் தொடர்பாகவும் 40 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பேசி இருக்கிறார்.

இதன் பின்பே இந்த பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தை தனது நண்பர் ரவி ராய் உடன் சேர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பாகவே திட்டம் தீட்டி இருக்கிறார் லால் கிருஷ்ணா. அதற்கு ஏற்றாற்போல் பண்ணை வீட்டில் தங்கியிருந்த தனது தாய் தந்தையர் மற்றும் தனது உறவினர்கள் சகோதரிகள் ஆகியவற்றை பல்வேறு காரணங்கள் சொல்லி நேபாளத்திற்கு அனுப்பி இருக்கிறார்.

அதன் பின்பே நேற்று முன்தினம் காலையில் விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை வீட்டிலிருந்த மண்வெட்டியால் இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்.

Also Read: காதலியை பழிவாங்க இப்படியா செய்வது? : காதனலால் பலியான 7 அப்பாவிகளின் உயிர்கள்; ம.பி.,யில் நடந்த பயங்கரம்!

கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பண்ணை வீட்டில் கொலை செய்த பின் இருவரையும் புதைப்பதற்கான குழியையும் தோண்டி வைத்திருக்கின்றனர்‌ லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராய்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சைதாப்பேட்டை 23-வது பெருநகர குற்றவியல் நீதிபதி கெளதமன் முன்பு நேற்று நள்ளிரவு ஆஜர்படுத்திய மயிலாப்பூர் போலிஸார் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

பண்ணை வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இருவரது உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாசில்தார் ராஜன் மற்றும் மயிலாப்பூர் போலிஸார் முன்பு 12 மணி அளவில் நடைபெற உள்ளது. கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரின் மகன் மற்றும் மகள் இன்று இரவு சென்னை வர உள்ளனர்.

Also Read: ஏர்போர்ட்→மயிலாப்பூர்→ பண்ணை வீடு: ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கொள்ளையர்கள் பிடிபட்டதன் பின்னணி இதோ!