Tamilnadu
திருடுவதற்கு எந்த பொருளும் இல்லாததால் ஆத்திரம்.. கோவில் கொட்டகையை கொளுத்திய மர்ம ஆசாமிகள்..!
கோவிலில் திருட முயற்சித்து பொருட்கள் கிடைக்காத ஆத்திரத்தில் அங்கிருந்த கொட்டகையை கொளுத்திவிட்டு சென்ற மர்ம நபர்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் மலைமீது இருக்கும் சிவன் கோயிலில் அதிக அளவில் மக்கள் வந்து வழிபாடு செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இப்படி இருக்கையில், நள்ளிரவு ஆட்கள் நடமாட்டமும் கோவில் பூசாரி இல்லாத நேரத்தில் நோட்டமிட்டு வந்த கொள்ளையர்கள் கோவிலில் திருட முயற்சித்து சிசிடிவி வயர்களை துண்டித்து திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர்.
இந்நிலையில் கோவிலில் எந்த பொருட்களும் கிடைக்காத ஆத்திரத்தில் கோவிலின் அருகே அமைக்கப்பட்டுள்ள கூரைக் கொட்டகைக்கு தீ வைத்தவிட்டு சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் கொட்டகையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!