Tamilnadu
பைக் வாங்கி தராத விரக்தி.. கூலித் தொழிலாளியின் மகன் எடுத்த விபரீதம் - செங்கல்பட்டில் நடந்த சோகம்!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு 19 வயதில் நாகராஜ் என்ற மகன் ஒருவர் உள்ளார். கூலி வேலை செய்து மகனை அருகில் உள்ள தனியார் கல்லூரியில் தந்தை கன்னியப்பன் படிக்க வைத்துள்ளார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் வாங்கி தருமாறு கூறியுள்ளார். குடும்ப சூழல் காரணமாக பின்னர் வாங்கி தருவதாகவும், அதவரை பொறுத்துக்கொள்ளுமாறு தந்தை கன்னியப்பன் கூறியுள்ளார். ஆனால், அவரது மகன் கேட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பைக் கிடைக்காத மன உலைச்சலில் வீட்டில் தனிமையில் இருந்த நாகராஜ் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த மறைமலை போலிஸார் கன்னப்பன் வீட்டிற்கு வந்து, நாஜராஜுன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் வாங்கிக்கொடுக்காத விரக்தியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!