Tamilnadu
திருமணமான ஒரே வருடத்தில் காதல் மனைவி தற்கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த தானம்தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் வரம்பியம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் காயத்ரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் காயத்ரியின் பெற்றோர்கள் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து காயத்ரியின் கணவர் பார்த்திபன், அவரது தாய் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!