Tamilnadu

முதல்வன் திரைப்பட பாணியில் அமைச்சர் சங்கரபாணி அதிரடி.. முறைகேடகாக செயல்பட்ட ஊழியர்கள் இடைநீக்கம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம், விஷார், களக்காட்டூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

விஷார் கிராம பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது விவசாயிகளிடம் அமைச்சர் சக்கரபாணி குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் பேசியபோது, நெல்லை கொள்முதல் செய்ய ரூ. 50 பணம் வசூலிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி, முதல்வன் திரைப்பட பாணியில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய பணம் பெற்ற அலுவலர், உதவியாளர், காவலர், ஆகிய மூன்று பேரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read: அரசுப்பள்ளி மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்: அமைச்சர் வெளியிட்ட 20 முக்கிய அறிவிப்புகள்!