Tamilnadu
அடிக்கடி போனில் பேசிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர காரியம்: விசாரணையில் பகீர்!
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிஷ் பிரம்மா, ரிஷியா கத்துனா. இவர்கள் இருவரும் சென்னை அடுத்து அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரஷியா தவறி விழுந்ததில் தலையில் அடிப்பட்டுள்ளதாகக் கூறி அவரை ஹரிஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ரிஷியாவின் உடற்கூறு ஆய்வில் அவரது தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் ஹரிஷை பிடித்து விசாரணை செய்ததில், மனைவி சில ஆண்டுகளாக வேறு சில ஆண்டுகளுடன் தொடர்ந்து செல்போனில் பேசிவந்துள்ளார். இதை கண்டித்தும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அவரது தலையில் கட்டையால் அடுத்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!