Tamilnadu
‘இங்கு ஏன் வந்தாய்’.. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வீடுதேடி வந்த தந்தை வெட்டி கொலை - மகனால் நடந்த கொடூரம்!
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கரும்பாயிரம். இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதிக்கு ஜீவா. விக்ரம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு சிவசங்கரி என்பவரை இரண்டாவதாக கரும்பாயிரம் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து முதல் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து இரண்டாவது மனைவியுடன் திருப்பூரில் வசித்துவந்தார். இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் மனைவியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் வந்தாய், எங்களுக்கு என்ன செய்தாய் என கூறி மகன்கள் சண்டைப் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கரும்பாயிரம் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து முதல் மனைவியைத் தாக்கச் சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மூத்த மகன் அரிவாளால் தந்தையை வெட்டியுள்ளார். இதில் கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தந்தையை கொலை செய்து தலைமறைவான மகனை தேடிவருகின்றனர். தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!