Tamilnadu
“ஒரு எஸ்.எம்.எஸ்.. OTP சொல்லுங்கோ” : கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று ₹1.30 லட்சம் மோசடி - பின்னணி என்ன?
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (57). தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த 11ம் தேதி, எஸ்.பி.ஐ வங்கி பெயரில் பான் கார்டை புதுப்பிக்குமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும், வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி 4 இலக்க எண்ணை நிரப்ப கோரிய விண்ணப்பம் வந்துள்ளது. உடனே அவர் கேட்ட விவரங்களை பூர்த்தி செய்ததை அடுத்து அதற்கான ஓ.டி.பி வந்துள்ளது.
பின்னர் சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.72,000, ரூ.25,000, மற்றும் ரூ.6,500 என மூன்று தவனையாக அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. அப்போதுதான் அவருக்கு வந்தது வங்கி பெயரில் போலியான குறுஞ்செய்தி என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் இதுகுறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலிஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் சந்தோஷ் வழக்கு பதிவு செய்து வங்கி பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி மருத்துவ கண்காணிப்பாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!