Tamilnadu

“அரசு பள்ளிகள்தான் நம்முடைய சொத்து”.. மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய DGP : வைரலாகும் வீடியோ!

தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக சில மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூகவளைதளத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு அறிவுரைகள் கூறும் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "மாணவர்களுக்கு வணக்கம். இரண்டு காணொலிகளைப் பார்தேன். இதைப்பார்க்கும்போது பாரதியார் கூறியதைப் போல் நெஞ்சு பொறுக்குதில்லையே என்பதுதான் நினைவுக்கு வந்தது.

நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நம் பெற்றோர்கள் ஏன் நம்மை அரசு பள்ளியில் சேர்த்தார்கள் என்று நாம் நினைத்துப் பார்த்தது உண்டா?. அவர்களிடம் சொத்து கிடையாது. ஆனால் உங்களுக்கு சொத்து உள்ளது.

அரசு பள்ளி, விளையாடு மைதானம், வகுப்பறை, ஆசிரியர்கள்தான் உங்கள் சொத்து. தற்போது அரசு பள்ளிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

பள்ளிக்கு மிகப்பெரிய கனவுகளோடு நாம் வருகிறோம். எனவே மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களா ஊழியர்கள் 25 பேருக்கு சம்மன் - அதிரடி விசாரணையில் இறங்கிய போலிஸ்!