Tamilnadu
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை.. வாலிபருக்கு தூக்குத் தண்டனை : போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் கடந்த 2018ஆம் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறுவதற்காக சிறுமி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியைத் தடுத்து நிறுத்தி அவரது தலையைத் தனியாகத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார் தினேஷ் குமார்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷ் குமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு போக்சோ நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை முடிவில், தினேஷ்குமார் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி கோக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, அத்தொகையைச் சிறுமி குடும்பத்திற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
”ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!
-
”குஜராத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கும் வாக்குத் திருட்டு” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
பசிப்பிணி மருத்துவராக காலை உணவின் கதிரவனாக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் : முரசொலி!