Tamilnadu
டேங்கர் லாரி மீது மோதிய கார்.. 6 மாத குழந்தையும், தந்தையும் பரிதாப பலி : உறவினர்கள் சோகம்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஸ்வினிகுமார். இவரது மனைவி சிவபாக்கியம். இந்த தம்பதிக்குத் திவானா (2) என்ற மகளும் 6 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் சென்றுள்ளனர். பிறகு இன்று அதே காரில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் வாகனம் செங்கல்பட்டு அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அஸ்வின்குமார் மற்றும் 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவபாக்கியம், மகள் திவானா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் படுகாயமடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இறந்த தந்தை மற்றும் குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் 6 மாத குழந்தையும், தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!