Tamilnadu
6 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயம்.. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜோடிக்கு நேர்ந்த சோகம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இளைஞரான இவருக்கு, தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அபிநயா வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்து குட்டை ஒன்றில் குளிக்கச் சென்றுள்ளார். பிறகு,குட்டையில் ஆழமான பகுதியில் சென்றதால் நீச்சல் தெரியாத அபிநயா நீரில் மூழ்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிவா, அவிநயாவை காப்பாற்றுவதற்காக அவரும் குட்டையில் இறங்கியுள்ளார். அப்போது இருவரும் குட்டை நீரில் மூழ்கியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் இரண்டு பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட, ஜோடிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!