Tamilnadu
சப்பாத்தி சுடும்போது வெடித்த சிலிண்டர்.. செங்கல்பட்டு அருகே மூவருக்கு நேர்ந்த விபரீதம்!
சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் கடுமையாக தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் பீராராம். அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேரந்த இருவர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் வைத்து அடுப்பில் சப்பாத்தி சுடும்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேரும் பலத்த தீக்காயமடைந்தனர்.
தீக்காயமடைந்த பீரா ராம், சங்கர் லால், முபாரக் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரில் பீராராம், சங்கர் லால் ஆகியோர் 45சதவீதத்திற்கும் மேலாக தீக்காயமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்த வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!