Tamilnadu
வயலில் வேலை செய்த 65 வயது மூதாட்டியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பிரபல ரவுடியை கைது செய்து போலிஸ் விசாரனை!
புதுச்சேரி அருகே பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இதுகுறித்து பாகூர் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவத்தில் கடலுார் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (23) ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் சிலம்பரசன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
சம்பவத்தன்று திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த சிலம்பரசன், கடலுார் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, ஆராய்ச்சிக்குப்பம் அருகே மது குடித்துள்ளான். பின்னர் நடந்து சென்றபோது, வயலில் வேலை பார்த்த மூதாட்டியிடம் மொபைல் போன் பறிக்க முயன்றுள்ளான், அவர் தர மறுக்கவே தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து நேற்று கடலூர் பகுதியில் சுற்றி திரிந்த சிலம்பரசனை பாகூர் தனிப்படை போலிசார் கைது கைது செய்து, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டியில் பிப்ரவரி மாதம் மூன்று மூதாட்டிகள், மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இச்சம்பவங்களில் சிலம்பரசனுக்கு தொடர்பு உள்ளதா என ஜெயங்கொண்டம் போலிசார் நேற்று பாகூர் காவல் நிலையத்திற்கு வந்து, சிலம்பரசனிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
Also Read
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!’ : த.வெ.க.வை விமர்சித்த முரசொலி தலையங்கம்!