Tamilnadu
”ஆந்திரா தாய் வீடு.. தமிழ்நாடு புகுந்த வீடு" - அமைச்சராக பதவியேற்ற பின் தமிழ்நாடு வந்த ரோஜா உருக்கம்!
ஆந்திரா மாநிலத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகை ரோஜா. ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைத்தது.
அப்போதே நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதையடுத்து அண்மையில் ஜென்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில், நடிகை ரோஜாவிற்கு முதல் முறையாக அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மேலும் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று நடிகை ரோஜா தமிழ்நாடு வந்துள்ளார். காஞ்சிபுரம் வந்த ஆந்திரா அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம், "ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் நன்றிகள். ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே ஊழைப்பேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !